மனிடோபாவில் கனடாவின் முதல் clade 1 ம்பாக்ஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று பொதுசுகாதார முகவர் நிலையம் அறிவித்துள்ளது. இந்த தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்ச்சியாக பரவிவரும் clade 1 ம்பாக்ஸ் பிரிவுடன் தொடர்புடையது.
இந்த தொற்று பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டவர் என கூறப்பட்டுள்ளது. பயணத்திலிருந்து திரும்பிய பிறகு ம்பாக்ஸ் அறிகுறிகளுக்காக மருத்துவ உதவியை நாடிய அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தொடர்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனடாவில் 2022 முதல் clade 2 ம்பாக்ஸ் பரவிவந்த நிலையில், clade 1 ம்பாக்ஸ் பாதிப்பு இதுவே முதல் முறை. ஆராய்ச்சிகளின் படி, clade 1 ம்பாக்ஸ் clade 2-ஐ விட அதிக தொற்றுக்கூடியதும், கடுமையான நோய்க்குறிகளை உருவாக்கக் கூடியதுமாக உள்ளது.
ம்பாக்ஸ் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது கடுமையான பருக்கள் மற்றும் காய்ச்சல், தசை வலி, தலைவலி, மற்றும் முதுகுவலியை போன்ற பிற அறிகுறிகளுடன் காணப்படும்.
இத்தகைய தொற்று கண்டறியப்பட்டாலும், பொதுமக்களுக்கு மிகக் குறைந்த பாதிப்பு அபாயம் உள்ளது என்று பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்று பரவலை தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.