18.8 C
Scarborough

கனடாவில் குற்றச் செயல்கள் குறைகின்றன!

Must read

கனடாவில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அளவும் தீவிரத்தன்மையும் கடந்த ஆண்டில் 4% குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்பட்ட உயர்வுக்குப் பின்னர் பதிவாகியுள்ள வீழ்ச்சியாகும். 2024ஆம் ஆண்டு, குற்றச் செயல்கள் (non-violent crimes) குறைந்தளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சொத்துக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் போன்றவையைக் கொண்ட குற்றத் தீவிரத்தன்மை குறியீடு கடந்த ஆண்டு 6 வீதமாக குறைந்துள்ளது.

இது 2021 முதல் 2023 வரை 9 வீதமளவில் உயர்ந்திருந்தது. மேலும், வன்முறைக் குற்றத் தீவிரத்தன்மை குறியீடு கடந்த ஆண்டில் 1% மட்டுமே குறைந்தது.

இதன் தாக்கம் மொத்த குற்றக் குறியீட்டில் குறைவாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது 15% உயர்வினை பதிவு செய்திருந்தது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article