மொன்றியாலுக்கு அருகே சாடோகே வேலியில் (Châteauguay Valley) அமைந்துள்ள செயிண்ட்-கிரிஸ்டோஸ்டோம் (Saint-Chrysostome) பகுதியில் நடந்த மோதலில் 30 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் மற்றொரு நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கீயூபெக் மாகாண போலீசாருக்கு இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை இரவு தகவல் கிடைக்கப் பெற்றதாக பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
கனடாவில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி | Man Dead Another In Hospital After Shooting
“இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும், ஆனால் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
30 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்று, அருகிலுள்ள ஒர்ம்ஸ்டவுன் (Ormstown) பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
“சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பல குழுக்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
காயமடைந்த நிலையில் கைதான குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் குணமடைந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் மற்றும் சந்தேக நபருக்கு எந்த வகையான தொடர்பு இருந்தது என்பது குறித்த தகவலை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.