அமெரிக்காவின் நியூயார்க்கில் யூத மத வழிபாட்டு தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் திட்டிய குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானிய பிரஜை ஒருவரை கனடிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
அமெரிக்கா நீதி திணைக்களம் இந்த விபரத்தை உறுதி செய்துள்ளது. க்யூபேக்கை சேர்ந்த முகமத் ஷாஷேப் கான் என்ற பாகிஸ்தான் பிரஜையே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்க வாழ் யூத மக்களை தாக்கும் நோக்கில் குறித்த நபர் திட்டங்களை தீட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபருக்கு எதிராக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரண்டு நாடுகளிலும் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தீவிரவாத இயக்கம் ஒன்றிற்கு ஆயுதங்களை வழங்க முயற்சித்தார் என குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் இன்றைய தினம் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளார்.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.


