கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ஹாமில்டன் நகரின் டண்டாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹாமில்டன் காவல்துறையின் கொலை விசாரணை பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கவர்னர்ஸ் வீதி எண் 77ல், ஒகில்வி தெருவின் மேற்கில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஹாமில்டன் அவசர மருத்துவ சேவைகள் (EMS), 30 வயதிற்குள் உள்ள ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர்.
இந்தப்பகுதியில் அடுத்த பல மணி நேரங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் பொலிஸாரின் பிரசன்னம் காணப்படும் எனவும், மக்கள் அதனை கருத்தில் கொள்ளுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.