15.4 C
Scarborough

கனடாவின் வீட்டு விலை மாற்றம் – 13 நகரங்களில் வசிப்பதற்கு எவ்வளவு வருமானம் வேண்டும்?

Must read

கனடாவின் வீட்டு வாங்கும் திறன் மே மாதத்தில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் குறைந்துவிட்டது என Ratehub.ca வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது. 13 முக்கிய நகரங்களில் 8 நகரங்களில் வீட்டு வாங்கும் திறன் மோசமடைந்துள்ளது.

மாறாக, கேல்கரி (Calgary), வினிபெக் (Winnipeg), ஹேமில்டன் (Hamilton), ஹாலிஃபேக்ஸ் (Halifax) ஆகிய 4 நகரங்களில் வீட்டு வாங்கும் திறன் மேம்பட்டுள்ளது.

கனடாவில் வீடு வாங்க ஒரு குடும்பம் ஆண்டுக்கு $127,000 – $230,000 வரை சம்பாதிக்க வேண்டும் என்பதையும் வாங்கூவர் (Vancouver) மற்றும் டொரொண்டோ (Toronto) ஆகிய நகரங்களில் வீடுகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வாங்கூவரில் வீடு வாங்க, ஆண்டுக்கு $236,000 வருமானம் தேவை என்றும் டொரொண்டோவில் $213,000 தேவைப்படுவதாகவும். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article