கனடாவின் கொன்சவேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே கட்சியின் போட்டியில் இந்தியா தலையிட்டதாகக் கூறப்படும் செய்திகள் வெளிவந்ததை அடுத்து, நியாயமான மற்றும் நேர்மையான தலைமையை வென்றதாகக் கூறினார். கடந்த காலங்களில் பல தடவை கனடாவின் தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும் அந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் பலமுறை மறுத்துள்ளது.
இந்நிலையில் உயர் பாதுகாப்பு அனுமதியுடன் கூடிய ஆதாரத்தை மேற்கோள் காட்டி Globe and mail newpaper 2022 இல் தலைமைத்துவ போட்டியில் பியர் பொய்லிவ்ரே இற்காக கனடாவின் தெற்காசிய சமூகத்தினருக்காக நிதி திரட்டி ஏற்பாடு செய்வதில் இந்திய முகவர்கள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன. Radio Canada ஒலிபரப்பினால் Globe அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டது.
ஏப்ரல் 28 நடைபெறவுள்ள கனடாவின் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது நாள் முழுவதுமே இந்தக் குற்றச்சாட்டு ஆதிக்கம் செலுத்தியது.
பாதுகாப்பு அனுமதியை மறுத்த ஒரே கனேடிய கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிடுகிறார். இது தொடர்பில் கருத்துரைத்த Carney எதிர்க்கட்சித் தலைவர் நாளுக்கு நாள், மாத மாதம், ஆண்டுக்கு ஆண்டு பாதுகாப்பு அனுமதியைப் பெற மறுப்பதை நான் முற்றிலும் பொறுப்பற்றதாகக் கருதுகிறேன் என்றார்.
கனடாவின் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் அண்மைய வருடங்களில் அதிகரித்து வரும் கவலையாக இருந்து வருகிறது, இந்த பிரச்சினையை ஆராய கடந்த ஆண்டு பொது விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின் முடிவில் கனடாவின் முந்தைய இரண்டு தேர்தல்களில் சீனாவும் இந்தியாவும் தலையிட முயற்சித்ததாக கண்டறியப்பட்டது.
இம்முறையும் சீனா, ரஸ்யா மற்றும் இந்தியா உடன் பிணைந்துள்ள முகவர்கள் நடந்துகொண்டிருக்கும் கனேடிய பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.