19.5 C
Scarborough

கனடாவின் கால்வாய் ஒன்றில் இந்திய இளைஞர் சடலமாக மீட்பு!

Must read

கனடாவில், கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கால்வாய் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கேரளாவிலுள்ள Tripunithura என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Vedatman Poduval (21).

கனடாவில் மூன்றாம் ஆண்டு கணினிப் பொறியியல் பயின்றுவந்த Vedatman, இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 2ஆம் திகதி காணாமல்போனார்.

இந்நிலையில், 6ஆம் திகதி, மதியம் 2.00 மணியளவில், ரொரன்றோவிலுள்ள கால்வாய் ஒன்றில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் எதனால் உயிரிழந்தார் என்பதை அறிவதற்காக அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், ஆய்வு முடிவுகள் வெளியாக 15 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டு கனடாவுக்குக் கல்வி கற்பதற்காக சென்ற Vedatman, மீண்டும் கேரளாவுக்குத் திரும்பவேயில்லை.

இந்நிலையில், மகனை உயிரற்ற நிலையில்தான் காணப்போகிறோம் என்ற எண்ணம், அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியிலும் சொல்லொணாத் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article