23.4 C
Scarborough

கனடா வாழ்வில் இந்திய இளைஞரின் மோகம்!

Must read

இந்திய இளைஞர் ஒருவர் கனடாவில் வாழ்வதை ஏன் விரும்புகிறேன் என்பதை கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் (Justin Trudeau) ஆட்சி காலத்தில், காலிஸ்தான் பிரச்சனை காரணமாக இந்தியா உடனான உறவுகளில் சரிவுகள் ஏற்பட்டன.

ஆனால், தற்போதைய பிரதமர் மார்க் கார்னி பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா-கனடா இடையேயான இராஜதந்திர உறவுகள் சிறப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கனடாவைப் பற்றி இந்தியர் ஒருவர், வீடியோ மூலம் பகிர்ந்து விடயங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சஹில் நாரங் என்ற குறித்த இளைஞர் பகிர்ந்து வீடியோவில் கனடாவை புகழ்ந்து இந்நாட்டை மிகவும் நேசிப்பதாகக் கூறி, அதற்கான காரணங்களையும் அடுக்குகிறார்.

கனடா உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்றாகும். அரசாங்கம் அதன் குடியிருப்பாளர்களுக்கு நிறைய செய்துள்ளது என அவர் குறிப்பிடுகிறார்.

சிறந்த நாட்களை இங்கே அனுபவிப்பீர்கள்
மேலும், “கனடாவில் வாழ்வது பற்றி நான் மிகவும் விரும்பும் விடயங்கள் மற்றும் இவைதான் நான் இன்னும் வெளியேறத் தயாராக இல்லாத முக்கிய காரணங்கள். இங்கு ஒவ்வொரு மாகாணத்திற்கு அதன் சொந்த குறைந்தபட்ச ஊதியம் உள்ளது.

நீங்கள் எந்த வேலை செய்தாலும், குறைந்தபட்சம் அந்தத் தொகையையாவது சம்பாதிப்பது உறுதி. நீங்கள் திறமையானவராகவும், ஒரு நல்ல துறையில் உறுதியான அனுபவமுள்ளவராகவும் இருந்தால், நீங்கள் இங்கே நிறைய சம்பாதிக்கலாம்.indian youth video viral about love canada

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும், எப்போதும் ஏதாவது நடக்கிறது, அது கடுமையான பனிப்பொழிவு, கடுமையான வெப்பம் அல்லது இடையில் எதுவாக இருந்தாலும் சரி. இந்த நாடு ஒருபோதும் நிற்காது. நீங்கள் நன்றாக செயல்பட்டு நன்றாக சம்பாதித்தால், உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாட்களை இங்கே அனுபவிப்பீர்கள்” என தெரிவித்துள்ளார்.

சஹிலின் இந்த வீடியோவானது வைரலான நிலையில், கிட்டத்தட்ட 3 லட்சம் பார்வைகளைப் பெற்றுவிட்டது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article