கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மேலதிகமாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
அத்துடன் குறித்த வரி விதிப்பு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுதன் பின்னர் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகரித்ததுடன் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் வரியை அதிகரித்தார்.
இது கனடிய பொருளாதாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் வரியை குறைப்பதற்கு கனடா மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு இணங்கி இருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய வரிகள் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண அரசால் கனடா தொலைக்காட்சியில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த விளம்பரத்தில் ட்ரம்பின் வரிவிதிப்புக்கள் போர்களை உருவாக்கலாம் என உரையாற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து 10 வீத வரி விதிப்பை அவர் அறிவித்துள்ளார்.

