8.7 C
Scarborough

கனடா பொதுத் தேர்தலில் மூன்று தமிழ் வேட்பாளர்களுக்கு வெற்றி!

Must read

கனடா பொதுத்தேர்தல்தலில் Liberal கட்சி 49.0 சதவீத வாக்குகளைப் பெற்று 168 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் Conservative கட்சி 42.0 சதவீத வாக்குகளைப் பெற்று 144 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் Bloc Québécois (BQ) கட்சி 6.7 சதவீத வாக்குகளுடன் 23 ஆசனங்களையும், NDP கட்சி 2.0 சதவீத வாக்குகளுடன் 7 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் Green Party 0.3 சதவீத வாக்குகளுக்காக ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

இதேவேளை இப் பொதுத்தேர்தலில் இம்முறை ஆறு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். அவர்களில் லிபரல் கட்சி சார்பில் மூவரும், கொன்சர்வேடிவ் கட்சியி சார்பில் இருவரும், கிறீன் கட்சி சார்பில் ஒருவரும் அடங்குவர். இவர்களில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட மூவரைத்தவிர ஏனைய மூவரும் தோல்வியை தழுவினர்.

லிபரல் கட்சிகளின் சார்பில் ஒக்வில் கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருடன் Pickering–Brooklin தொகுதியில் போட்டியிட்ட ஜுனிதா நாதன் ஆகியோரே வெற்றி பெற்ற வேட்பாளர்களாவர்.

இவர்களைத் தவிர கொன்சர்வேடிவ் கட்சி சார்பில் களமிறங்கிய இரு வேட்பாளர்களான Markham Stouffville தொகுதியில் போட்டியிட்ட நிரான் ஜெயநேசன் மற்றும் Markham Thornhill தொகுதியில் போட்டியிட்ட லியோனல் லோகநாதன் ஆகியோருடன் Green Party சார்பில் Etobicoke வடக்கு தொகுதியில் போட்டியிட்ட சருன் பாலரஞ்சன் ஆகிய வேட்பாளர்கள் தோல்வியுற்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article