15.1 C
Scarborough

கனடா பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி – அக்டோபரில் பாராளுமன்றத் தேர்தல்

Must read

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்கா உடன் வர்த்தகப் போர் ஏற்பட்டு உள்ள நிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.

வரும் அக்டோபரில், மாதம் கனடா பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது. நெருக்கடி ஏற்படவே, பிரதமர் பதவியில் இருந்தும், லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக ட்ரூடோ அறிவித்தார். இதனையடுத்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடாவின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மோதல் ஏற்பட்டு உள்ளது. கனடா பொருட்களுக்கு விரி விதிக்கும் டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் மாகாணமாக மாற்ற வேண்டும் என மிரட்டல் விடுத்து வருகிறார்.

இந்நிலையில், கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவுடன் நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப்புடன் மார்க் கார்னி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பார்லிமென்டில் லிபரல் கட்சிக்கு தேவையான எம்.பி.க்கள் ஆதரவு உள்ள போதிலும் மார்க் கார்னி எம்.பி.யாக இல்லை. இதனால், கனடா பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்கும் என செய்தி வௌியாகியுள்ளது.

“நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படும் அரசாங்கம். உடனடியாக பணியை தொடங்குவோம்” என்று அவர் பதவியேற்பு விழாவுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கார்னி தெரிவித்தார்.

இதன்பின்னர் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட கார்னி புதிய அமைச்சரவையையும் அறிவித்தார்.

இதில் கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதியமைச்சராக பதவி ஏற்கிறார்.இதனைத் தவிர, Francois-Philippe Champagne நிதியமைச்சராகவும், Melanie Joly வெளியுறவுத் துறை அமைச்சராகவும்,Chrystia Freeland போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், Kamal Khera சுகாதார துறை அமைச்சராகவும், நியமனம் பெற்றுள்ளனர்.

கார்னி தனது அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 20இற்குள் கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article