சமூக ஊடகமான Truth Social தளத்தில் வியாழக்கிழமை பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி Donald Trump பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான கனடாவின் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதை மிகவும் கடினமாக்கும் என்று வலியுறுத்தினார்.
August 01 காலக்கெடுவிற்கு சற்று முன்னதாக Trump பின் கருத்து வெளிவந்துள்ளது, September 2025, 80வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என்று பிரதமர் Mark Carney புதன்கிழமை அறிவித்த முடிவைத் தொடர்ந்து கனடாவுடனான Trump பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த September இல் ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை கனடா அங்கீகரிக்கும் என்ற கனேடிய பிரதமரின் அறிவிப்பு அதற்கு முன்னரான U.K. மற்றும் France ஆகிய நாடுகளின் அறிவிப்புகளைப் போலவே, மிகவும் தொந்தரவாக உள்ளது என்று American Jewish Committee ஒரு செய்திக்குறிப்பு மூலம் பதிலளித்தது.
Israel க்கும் பிரதமர் Benjamin Netanyahu விற்கும் உறுதியான ஆதரவை வழங்குவதாக Trump பின் நிர்வாகம் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளது.
Hamas அமைப்பை தவிர்த்து 2026 இல் சுதந்திரமான பொதுத் தேர்தல்கள் மற்றும் வருங்கால பாலஸ்தீன அரசை இராணுவமயமாக்குதல் உள்ளிட்ட பாலஸ்தீன அதிகாரசபையின் நிர்வாக சீர்திருத்தங்களின் அடிப்படைகளைக் கொண்ட கனடாவின் அங்கீகாரம் நிபந்தனைக்குட்பட்டது என்று Carney வலியுறுத்தினார்.
எவ்வாறிருப்பினும், கனடாவிற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள இரும்பு, அலுமினியம் மற்றும் automobile மீதான தற்போதைய அமெரிக்க வரிகள் உட்பட வர்த்தக மோதல்களைத் தீர்க்க கனடாவும் அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.