ஒண்டாரியோவின் Guelph நகரில் உள்ள காபி கடை ஒன்றிற்குச் சென்ற Jonathan Puddle மற்றும் அவரது மகள் Emmi, எதிர்பாராத விதமாக மனிதக்கடத்தல் தொடர்பான தேடுதல் வேட்டையில் சிக்கினர். இவர்கள் இருவரும் அந்நியர்கள் எனத் தவறாகப் புரிந்துகொண்ட அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர், சிறுமியின் பாதுகாப்புக் கருதி பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து Guelph Police Service இவர்களின் சிசிடிவி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு விசாரணை நடத்தியது.
சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் வைரலான நிலையில், அதிர்ச்சியடைந்த ஜொனாதன் உடனடியாக பொலிஸாரைத் தொடர்பு கொண்டு அது தனது மகள் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
கனடாவின் Highway 401 பகுதிகளில் மனிதக்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் காட்டிய இந்த விழிப்புணர்வைப் பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
“எனது மகள் ஆபத்தில் இருந்திருந்தால் யாராவது இப்படித்தான் உதவியிருப்பார்கள், அந்த நபரின் செயலுக்கு நான் நன்றி கூறுகிறேன்” எனத் தந்தை ஜொனாதன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

