17.6 C
Scarborough

கடத்தப்பட்ட மாணவியை மீட்க முயன்ற இளைஞனுக்கு காவல்துறை வழங்கிய அங்கீகாரம்

Must read

கண்டி – கம்பளை பிரதேசத்தில் தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட 19 வயது சிறுமியை மீட்க முயன்ற இளைஞருக்கு சிறிலங்கா காவல்துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

சம்வத்தின் போது, பலத்த காயக்களுக்கு உள்ளான குறித்த இளைஞன், தனது வீர மீட்பு முயற்சிக்காக காவல்துறையினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 11 ஆம் திகதி வானில் வந்த ஒரு குழுவினரால் பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்தி செல்லப்படும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காவல்துறை விசாரணை

அத்துடன், குறித்த காணொளியில் கடத்தப்படும் மாணவியை மீட்பதற்காக இளைஞர் ஒருவரின் முயற்சியையும் துணிச்சலையும் பல சமூக ஊடக பயனர்களும் பாரட்டி வந்தனர்.

அதனை தொடர்ந்து, கடத்தலில் முக்கிய சந்தேக நபர் சிறுமியின் தந்தை வழி உறவினர் என்றும், அது திருமணப் பிரச்சினை காரணமாக ஏற்பட்டதாகவும் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியமை குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article