5.3 C
Scarborough

ஒன்டாரியோவில் விபத்து; சிறுவன் பரிதாப மரணம்

Must read

கனடாவின் வடகிழக்கு ஒன்டாரியோவில் இரண்டு ஆல்-டெர்ரெய்ன் வாகனங்கள் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் பிளம்மர் அடிஷனல் டவுன்ஷிப் பகுதியில் உள்ள க்ளவுட்ஸ்லீ பாதை அருகே உள்ள வயலில் சம்பவித்துள்ளது.

குறித்த வாகனங்கள் மோதியதில், 8 வயது சிறுவன் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதாகவும் அப்போது சிறுவன் ஹெல்மெட் அணிந்திருந்தார் எனவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுவனின் உடற்கூறு பரிசோதனை சட்பரி நகரில் நடைபெற உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article