ஒட்டாவாவின் சைனாடவுன் (Chinatown) பகுதியில் இயங்கி வரும் நியூ டான் மெடிக்கல் கிளினிக் (New Dawn Medical Clinic) என்ற தனியார் ‘பாதுகாப்பான விநியோக’ (Safer Supply) மையத்தின் மீது விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
ஒன்டாரியோவின் மருத்துவச் சபையான CPSO-விடம் (College of Physicians and Surgeons of Ontario) அதிகாரபூர்வமாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கேத்தரின் மெக்கென்னி (Catherine McKenney) மற்றும் சம்மர்செட் வார்டு கவுன்சிலர் ஏரியல் ட்ராஸ்டர் (Ariel Troster) ஆகியோர் இணைந்து இந்த கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
கூட்டாக அளித்த இந்தக் புகாரில், கிளினிக்கின் செயல்பாடுகள் அப்பகுதியில் “குழப்பத்தை” ஏற்படுத்தியுள்ளதாகவும், அதன் மருந்துச் சீட்டு (prescribing) நடைமுறைகள் குறித்து தீவிரமான கவலைகள் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

