October மாதத்திற்கான பணவீக்க புள்ளிவிவரங்களை Statistics Canada இன்றதினம் வெளியிட உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக பொருளாதார வல்லுநர்களின் Reuters கருத்துக் கணிப்பு September மாதத்தில் 2.4 சதவீதமாக இருந்த ஆண்டு பணவீக்கம் October இல் 2.1 சதவீதமாகக் குறைந்துள்ளதாகக் கணித்துள்ளது.
October மாதத்தில் எரிவாயுக்களின் விலைகள் குறைந்திருந்ததால் இந்த சரிவு எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர், இருப்பினும் உணவுப் பொருட்களின் விலையினால் பணவீக்கம் அதே உயர்ந்த மட்டத்தில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
September இல் கனடாவின் பெரும்பாலான பழிவாங்கும் வரிகள் முடிவுக்கு வந்திருப்பது October மற்றும் வரவிருக்கும் மாதங்களுக்கு பணவீக்கத்தில் மேலும் கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்த உதவும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும், வேலையின்மை அதிகரித்து வருகின்ற போதிலும், நிலையான நுகர்வோர் செலவினம் பணவீக்கம் மேலும் குறையாமல் தடுத்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
December 10 ஆம் தேதி Bank of Canada இந்த ஆண்டின் இறுதி விகித முடிவை எடுப்பதற்கு முன்னர், October மாத CPI அறிக்கை கடைசியாக இருக்கும்.

