17.3 C
Scarborough

என்னுடைய Laptop வெண்டிகுண்டு – விமானத்தில் பீதியை கிளப்பிய இளைஞன்

Must read

சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இ-மெயில், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மர்மநபர் தெரிவிக்கும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமானத்தில் சோதனை நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான விமானங்கள் ரத்தும், ஒரு சில விமானங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், விமானத்தில் பயணிக்க தயாரான போது பயணி ஒருவர் சக பயணியிடம் ‘என் லேப்டாப் ஒரு வெடிகுண்டு’ என்று தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணி

அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து வர்ஜீனியாவுக்கு செல்லவிருந்த விமானத்தில் 27 வயது வாலிபர் ஒருவர், சக பயணியிடம் “என் லேப்டாப் ஒரு வெடிகுண்டு” என்று கூறியதை அடுத்து அவர் அவசரமாக தரையிறக்கி விடப்பட்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் கூறிய வாலிபர் தாஜ் மாலிக் டெய்லர் என அடையாளம் காணப்பட்டு அவரிடம் FBI விசாரணையை தொடங்கியது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article