6 C
Scarborough

என்.பி.பி. வசமாகும் வடக்கு மாகாணசபை: பிரதி அமைச்சர் நம்பிக்கை!

Must read

வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாண சபைகளையும் தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழியை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கியுள்ளோம். பரந்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்குரிய நடவடிக்கை விரைவில் ஆரம்பமாகும். நிறைவேற்று அதிகாரம் பிரதமர் மற்றும் அமைச்சரவை வசம் இருக்கும். தனி நபர் வசம் அதிகாரம் இருந்ததால்தான் இந்நாடு வங்குரோத்து அடைந்தது.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் இருப்பதால் ஒன்றும் கிடைக்காது என்பதால் எதிரணி எம்.பிக்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட பார்க்கின்றனர். பிரச்சினை இல்லை .அது அவர்களுக்குரிய உரிமை. எது எப்படி இருந்தாலும் 9 சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும்.” -எனவும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article