உலகின் அதி நம்பிக்கையான தலைவராக இந்திய பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு உலக அளவில் பெரும் மதிப்பு இருப்பதாகவும், இவரை இந்திய மக்கள் பலர் நம்பிககைக்கு உரியவராக கருதுவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட வணிக புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே மேற்படி தேர்வு இடம்பெற்றுள்ளது.
இதில் 75 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதல் நபராகவும், இரண்டாவதாக தென்கொரிய ஜனாதிபதி யும், மூன்றாவதாக ஆர்ஜென்டினா ஜனாதிபதியும் உள்ளனர்.
கனடா பிரதமர் 4 ஆவது இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமர் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 44 சதவீத ஆதரவுடன் 8வது இடத்தை பிடித்துள்ளார்