உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநரான சைமா வாஸெட்டை பதவியிலிருந்து நீக்க பங்களாதேஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளான சைமா வாஸெட், கடந்த ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி ஜெனீவாவிலுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) நிர்வாகக் குழுவால், தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநராக நியமிக்கப்பட்டார். டெல்லியை மையமாகக் கொண்டு சைமா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சைமா வாஸெட்டை பங்களாதேஷின் ஊழல் எதிர்ப்பு ஆணையகம் (ACC) விசாரித்து வருகிறது.
சைமா வாஸெட்டை உலக சுகாதார நிறுவனத்திலிருந்து நீக்க பங்களாதேஷின் ஊழல் எதிர்ப்பு ஆணையகம் (ACC )தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக பங்களாதேஷின் சுகாதார அமைச்சரகம் மற்றும் வெளியுறவு அமைச்சரகத்திற்கு கடிதங்களை அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. என்று தகவல் வெளியாகியுள்ளன.