நடிகர் சூரி தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமாவாக உருவாகிறது.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ், தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூரி, அஜித்குமாரை சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில், “அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது – உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது” என்று குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

