19.9 C
Scarborough

ஈரான் துறைமுகத்தில் கொள்கலன் வெடிப்பு – 300க்கும் மேற்பட்ருக்கு காயம்!

Must read

தெற்கு ஈரானில் உள்ள ஒரு முக்கிய துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட ‘பாரிய’ வெடிப்பில் குறைந்தது 300 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷாஹித் ராஜீ துறைமுக வெடிப்பில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் அவசர சேவைகளை மேற்கோள் காட்டி தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என்றாலும், மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மெஹ்ரதாத் ஹசன்சாதே, “ஷாஹித் ராஜீ துறைமுக பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பலநாள் கொள்கலன்கள் வெடித்ததால்” இந்த வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article