4 C
Scarborough

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரி கொழும்பில் போராட்டம்

Must read

சர்வதேச ரீதியில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பில் உள்ள தெவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாலஸ்தீனத்தின் நண்பர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான், இலங்கைக்கான ஈரானிய தூதுவர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

ஈரானுக்கு கை வைக்காதே, அமெரிக்க – இஸ்ரேலிய பயங்கரவாதத்தை நிறுத்து மற்றும் ‘ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய போரைத் தவிர் போன்ற கோசங்களை முன்வைத்தனர்.

குறிப்பாக சியோனிசமற்ற உலகம் – அமைதியான உலகிற்கு வழிவகுக்கும்’ என்ற வாசகம் அடங்கிய அட்டைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும், ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article