வடக்கு, மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலை நோக்கி ஈரான் புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சைரன்கள் ஒலித்ததும் விமானப்படைகள் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏவுகணைத்தாக்குதலைத் தொடர்ந்து மக்களை பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லுமாறும் மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே பாதுகாப்பாக இருக்குமாறும் இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.