காஸா யுத்தத்தில் சிக்கி இரண்டு கைகளையும் இழந்த பலஸ்தீன சிறுவனின் புகைப்படம் 2025ம் ஆண்டின் சிறந்த உலக பத்திரிகை புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் பலஸ்தீனத்தை சேர்ந்த மகமூத் அஜோர்(9) என்ற சிறுவன் 2 கைகளையும் இழந்தான்.
கைகளை இழந்த சிறுவனின் புகைப்படத்தை கட்டாரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சமர் அபு எலோப் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்காக எடுத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் இந்த ஆண்டின் மிக சிறந்த பத்திரிகை புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் ஒரு சிறுவனின் கதையை சொல்லும் அதேவேளை பலதலைமுறைகளின் மீது தாக்கம் செலுத்தப்போகும் பரந்துபட்ட யுத்தம் குறித்தும் பேசுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
141 நாடுகளைச் சேர்ந்த 3,778 புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்த 59,320 புகைப்படங்களில் இருந்து இந்த புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.