முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வருடத்தில் ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக இவ்வருடத்தில் பாராளுமன்றம் வரவிருப்பதாகவ கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலும் மக்கள் போராட்டத்துக்கு மத்தியில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியை அவர் சுமூக நிலைமைக்கு கொண்டு வந்திருந்தார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்கள் குறிப்பிட்டளவு வெறுப்பு காட்ட ஆரம்பித்துள்ள நிலையில் தக்க தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருவாரென நம்பகமான தகவல் கூறுகின்றன.
ஜனநாயக தேசிய முன்னணியில் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இருவரில் ஒருவர் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருவதற்கு வாய்ப்பளிப்பர் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.