நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீக்கும் என நான் நம்பவில்லை. அம்முறையை தொடர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பும்கூட என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என சந்திரிக்கா அம்மையார் உறுதியளித்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. பின்னர் மஹிந்தவும் வாக்குறுதி அளித்தார். அதற்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படவில்லை.
நல்லாட்சி காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் சில மட்டுப்படுத்தப்பட்டன. அதுவும் எமது அழுத்தங்களால்தான் நடந்தது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்க நீக்குவார் என நான் நம்பவில்லை. அதேபோல நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நான்கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.” – என விஜயதாச ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.