மேலும், பல பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. 10,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் மூலமாக மீட்கும் பணியில் அந்த நாட்டின் பேரிடர் மீட்புத்துறையினர் ஈடுபடுகிறார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.