16.4 C
Scarborough

இரு இங்கிலாந்து அமைச்சர்களுக்கு இஸ்ரேல் தடை விதிப்பு

Must read

இங்கிலாந்து பாராளுமன்ற அமைச்சர் குழுவினர் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றனர். இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த இரு பெண் அமைச்சர்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதித்து திருப்பி அனுப்பியது.

இதுதொடர்பாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடியேற்ற ஆணையகம் கூறும்போது, இங்கிலாந்து அமைச்சர்களான யுவான் யாங், அப்திசம் முகமது ஆகியோர் பாதுகாப்புப் படைகளின் செயற்பாடுகளை ஆவணப்படுத்தவும் இஸ்ரேல் எதிர்ப்பு வெறுப்பைப் பரப்பவும் திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தைப் பரப்ப விரும்பியதால் அவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தது.

அமைச்சர்களுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இஸ்ரேலுக்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் லாமி கூறும்போது,

இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இதுபோன்று நடத்துவது சரியல்ல என்பதை இஸ்ரேல் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளேன்.

இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது, எதிர்மறையானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. இரு அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு ஆதரவை தெரிவித்துள்ளேன்.

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு திரும்புவதையும்,பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், காஸாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் இங்கிலாந்து அரசு கவனம் செலுத்துகிறது என்றார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article