2025 ஆம் ஆண்டுக்கான கனடா தினம் (Canada Day) இவ்வாண்டு ஒரே நேரத்தில் பெருமிதத்தையும், சிந்தனையையும் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆட்சி மலர்ந்ததை தொடர்ந்து கனேடியர்கள் மீண்டும் தங்களின் நாட்டை பற்றி புதிதாக மதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து (Environics Institute) நடத்திய ஆய்வில், 2024 ஆம் ஆண்டு COVID-19 ஊரடங்கு மற்றும் பொருளாதார நிலைமைகளுக்குப் பின்னர் குறைந்து போயிருந்த தேசிய இனம் குறித்த பெருமை மீண்டும் உயர்ந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டுகளில் 73% ஆக இருந்த ‘தீவிரமான தேசிய பெருமை’ உணர்வு 53% ஆகக் குறைந்தது. ஆனால் இப்போது, 86% பேர் தங்களை கனடியராக பெருமைப்படுகிறார்கள் என கூறப்படுகிறது.