மேஷம்
வம்படியாக புதிய பொறுப்புகளை ஏற்க நேரும். இன்று, வேலைகளைப் பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.
ரிஷபம்
மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான பணவரவால் சந்தோஷம் நிலவும்.
மிதுனம்
புதிய விரிவாக்க முயற்சிகளால் வியாபாரம் களைகட்டும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம், வங்கிக் கடன் உதவியால் நிறைவேறும்.
கன்னி
இன்று, பெரியவர்கள் ஆசிகள் பூரணமாகக் கிடைத்து வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொழுதுபோக்கு அம்சங்கள் மனதை செலுத்துவது நல்லது. உடன் பிறப்புக்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் அடைவீர்கள்.
மகரம்
இன்று தனவரவு சிறப்பாக இருக்கும். புதிய சொத்து சேர்க்கைகள் ஏற்படும். மனைவியுடன் கழிக்கும் காலங்கள் மகிழ்ச்சி மிக்கதாக அமையும். கலைஞர்களின் வருமான அளவு உயரும்.
கடகம்
பலவழிகளிலும் வருமானம் ஓரளவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளை அனுசரித்து செல்லாவிட்டால், அல்லல்பட நேரலாம். எச்சரிக்கை உணர்வோடு வாகனப் பயணங்களை மேற்கொள்வது நல்லது.
சிம்மம்
அனுசரணையோடு, குடும்பத்தோடு குதுகலமாக பொழுதைக் கழித்து கவலைகள் மறையும். ஒரு நாள் கழிவது ஒரு யுகம் கழிவது போன்றிருக்கும். நீர்நிலைகளில் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
துலாம்
இன்று, வருமானம் சுமாரான அளவுக்கு இருக்கும். குடும்பத்தில் உள்ளவரை அனுசரித்துச் செல்லாவிட்டால், அல்லல்பட நேரலாம். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
மீனம்
இன்று ஆன்மீக சிந்தனைகள் அதிகரித்து மனதில் அமைதிக்கு வழிவகுக்கும். சிலர் மடியில் மழலை தவழ கூடிய மகிழ்ச்சி மிக்க காலம் கனியும். தீர்த்த யாத்திரைகள், உல்லாசப் பயணங்கள் மூலம் சந்தோஷம் நிலவும்.
தனுசு
இன்று, அதிகாரிகள் மனம் திருப்தி அடையும் வகையில், கடமை உணர்வுடன் செயல் பட்டு அவர்களின் மனம் கவர்வீர்கள். பெண்களால் வீண் செலவுகள் ஏற்படும். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம்.
விருச்சிகம்
திருமணத்திற்கு நீண்ட நாளாக காத்திருந்தவர்கள் வீட்டில், மேளச்சத்தம் கேட்கும். தொழில் துறையினருக்கு பெரிய அளவில் உற்பத்திப் பெருக்கம் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை ஓரளவு குறையும்.
கும்பம்
இன்றைய நாள் காரியம் வெற்றியோடு, களிப்பும் அதிகரிக்கும் . அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் கூடும் அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படலாம்.