மேஷம்
கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் கொள்வர். குடும்பத்தில் விவாதம் வந்து போகும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். உடல் நிலை மேம்படும். சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவீர்கள். வழக்கறிஞர்கள் செழிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
இன்று கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
மன நிம்மதி அதிகரிக்கும். வியாபாரத்தில் திருப்புமுனை உண்டாகும். பிடித்தவர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அதனால் மனதில் எல்லையற்ற மகிழ்வு கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். சுபச் செலவுகள் அதிகமாகும். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கடகம்
இளைஞர்கள் காதலில் எச்சரிக்கையாக இருப்பது நலம். குடும்பத்தில் விவாதம் வந்து போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். அக்கம் பக்கத்து வீட்டார் உதவுவர்.
அதிரஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
விற்பனை பிரதிநிதிகள் தாங்கள் எதிர்பார்த்த ஆர்டர்களை எடுத்து முடிப்பர். வேற்று மதத்தவர் உதவுவார். பெண்களுக்கு வேலை கிடைக்கும். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கன்னி
புதிய வாய்ப்புகள் கிடைத்து தங்களுக்கு திருப்புமுனை உண்டாகும் நாள். உத்யோகஸ்தர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். சுபகாரியம் விரைவில் கூடி வரும். உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். அரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
துலாம்
பெண்கள் கணவரிடம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்காமல் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது. நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வெளியூர் பயணம் தடைபடும். மருத்துவர்கள் சாதனை படைப்பர். விவசாயிகளுக்கு தேவையான கடன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
விருச்சிகம்
விருந்தினர் வருகை அதிகரிக்கும். வழக்கறிஞர்களுக்கு தங்கள் வழக்குகள் தள்ளிபோகும். இதுவரை தேடிய வரன் நல்லபடியாக அமையும். பிள்ளைகள் நன்கு படிப்பர். சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
தனுசு
தங்கள் காரியத் தடைகளெல்லாம் நீங்கி பணவரவு உண்டாகும். புகழ் பெற்றவர்களின் நட்பு உண்டாகும். எதிரிகள் நண்பர்களாவர். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைத்து விடுவீர்கள். அலுவலகத்தில் உள்ள நீண்ட நாள் பிரச்சினை தீரும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
மகரம்
ஆன்மீகத்தை மனம் நாடும். கோவில் யாத்திரை செல்வீர்கள். மனம் அமைதியுறும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. அரசு காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் நன்கு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கும்பம்
பணவரவு அதிகரிக்கும். வங்கியில் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தொகை வைப்புநிதியாக செலுத்துவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் உஷ்ணம் அதிகமாகும். ஆதலால், இளநீர் மற்றும் மோர் அருந்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மீனம்
உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் உள்ளவர்கள் பண விஷயமான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும். நண்பர்களிடையே சிறு மனஸ்தாபங்கள் நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

