15.1 C
Scarborough

இன்றைய ராசிபலன் -28.06.2025

Must read

மேஷம்

அரசியல்வாதிகளுக்கு புகழ். கௌரவம் உயரும். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் நன்மை உண்டு. பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

ரிஷபம்

மார்கெட்டிங் பிரிவினர் புதுப்புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பார்க்கலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது. அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கடகம்

உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட ஒப்பந்த வேலைகளில் தங்களுக்கே வெற்றி நிச்சயம். நட்பு வட்டம் விரிவடையும். உற்சாகமான தினமாக இன்று அமையும். வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுக மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்வர். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். உடல் பலம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை மேற்கொண்டு அதிக லாபத்தை அடைவர். உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர், பெற்றோரின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களின் ஆலோசனையை பரிசீளித்துப் பாருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

உங்கள் பிள்ளைகள் விளையாட்டுப் போட்டியில் பரிசு பெற்று உங்களுக்கு பெருமையைத் தேடித்தருவர். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட ஊழியர்களுக்கு தகுந்த பாடம் இன்று கிடைக்கும். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்

பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து செயல்படுவர். மனைவிவழி உறவினர்களுடன் மீண்டும் இணைவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். உத்யோகஸ்தர்களுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விசயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம்.புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மகரம்

தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் கீழ்படிந்து நடப்பர்.. தியானம் மேற்கொள்வீர்கள். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். வியாபாரிகளிடம் வியாபார யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை அவசியம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மீனம்

இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். மாணவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article