11.3 C
Scarborough

இன்றைய ராசிபலன் (26.02.2026): காதலர்களின் திருமண முயற்சி பலிக்கும்..!

Must read

மேஷம்

பெண்களுக்கு விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். காதலர்களிடையே ஊடல் வந்து விலகும். பெரியவர்களின் உடல் நலனில் கவனம் தேவை. மாணவர்கள் விளையாட்டு மற்றும் படிப்பிலும் அக்கறைகொள்வர். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கழுத்து வலி வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

வியாபாரத்தில் போட்டிகளை தவிடுபொடியாக்குவீர்கள். குடும்பத் தலைவியின் எண்ணம் பூர்த்தியாகும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்களிடம் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. அவர்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மிதுனம்

வெளிநாட்டு நண்பர்கள் உதவுவர். உறவினர்கள் வந்து போவர். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். அக்கம் பக்கத்து வீட்டார் உறவு நல்லிணக்கம் தரும்.பொதுபணிகளில் உள்ளவர்கள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். மாணவர்கள் படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடகம்

வியாபாரிகளுக்கு லாபம் கூடும். உத்யோகத்தில் தங்கள் நிர்வாகத் திறமையால் பதவி உயரும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். யார் உதவியுமின்றி படிப்பர். பங்குச் சந்தையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம்

மனம் உற்சாகத்துடன் இருக்கும். புதிய திட்டங்களை மனதிற்குள் அசைபோடுவீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் விலகும். உத்யோகம் சாதகமாக செல்லும். தொழிலுள்ள சவாலை எதிர்கொள்வீர்கள். குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

வியாபாரிகள் கடனில் ஒரு பகுதியை அடைப்பர். மார்கெட்டிங் பிரிவினரின் இலக்கு பூர்த்தியடையும். காதலர்கள் வெளியிடங்களுக்குச் சென்று தங்கள் திருமண வாழ்வைப்பற்றி முடிவெடுப்பர். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். வியாபாரிகளின் தங்கள் தொழிலுக்கு ஏற்ப வங்கிக் கடன் கிட்டும்.

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் பாராட்டுவர். வேலை தேடுபவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

நண்பர்களிடத்தில் கவனம் தேவை. கலைஞர்களது படம் விரைவில் வெளியாகும். நல்ல தொகை கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். வெளிநாட்டிற்கு செல்ல விசா கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும்.

அதிர்ஷட நிறம்: சாம்பல்

மகரம்

வியாபாரிகளின் லாபத்தை குவிக்கும் கனவு பலிக்கும். பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் நன்மைகள் உண்டு. தம்பதிகளுக்கு திடீர் வெளியூர் பயணம் உண்டு. பங்குச் சந்தை பயனளிக்கும். மாணவர்களின் மனம் அலைபாயும். யோகா தியானம் மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

இன்று எழுந்தவுடன் உடற்பயிற்சியினை துவங்கி நாளை ஆரம்பிப்பீர்கள். குல தெய்வ பிரார்த்தனை நிறைவேறும். காதலர்களின் திருமண முயற்சி பலிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களிடம் கவனம் தேவை. தொலைந்த போன பொருள் கிடைக்கும். தேவைக்கேற்ப பணம் வந்து சேரும். பெண்களின் மாதவிடாய் வலி தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மீனம்

பெண்களின் திருமண கனவு பலிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வழக்கறிஞர்களுக்கு புகழ் ஓங்கும். உறவினருடன் இந்த நாளை ஒருசிலர் கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க தற்போதிருந்தே பயிற்சி பெறுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

dailythanthi

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article