மேஷம்
வாகனத்தில் கவனம் தேவை. சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் வேகமான முன்னேற்றம். வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவார். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரிஷபம்
வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். உடல் நலத்தில் குளிர், இருமல் வர வாய்ப்பு. சூடான பானங்கள் பருகுங்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வர். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் புதுமைகள் வெற்றி பெறும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தாயார் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கடகம்
உடல் வலிமை உயரும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபத்தை காண்பர். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். லாபம் மேம்படும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கன்னி
தொழிலில் விரிவாக்க திட்டம் வெற்றி பெறும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
துலாம்
மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை ஆழமாக புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். கை. கால் வலி வந்துப் போகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். நினைத்த காரியம் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். உடல் வலி குறையும். ஆரோக்கியம் நிலைநிலையாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
உங்கள் உழைப்பால் மேலாளர்கள் கவரப்படுவார்கள். தொழில் வளர்ச்சி உண்டு. திடீர் பயணங்கள் வந்துப் போகும். ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்
மகரம்
இன்று உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழ்ப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கும்பம்
முக்கியமான பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில்நுட்பத்தில் திறமை காட்டுவீர்கள்.பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
மீனம்
உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களை பாதுகாப்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சிறந்த மதிப்பெண்கள் பெறுவீர்கள். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்