மேஷம்
வியாபாரத்தை விரிவுப்படுத்த புதிய யோசனைகள் தோன்றும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். வர வேண்டிய பணம் வசூலாகும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் கனவு பலிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ரிஷபம்
உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். பணவரவுக்கு பஞ்சமில்லை. பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு தெம்பளிக்கும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மிதுனம்
கடன் சுமை குறையும். பிள்ளைகளுக்காக சேமிக்க துவங்குவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அன்புக்குரியவரை சந்தித்து நீண்ட நேரம் உரையாடுவீர்கள். தம்பதிகள் சேர்ந்து குடும்பத்திற்கான சில தியாகங்களை செய்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்டவைகளில் தங்களுக்கு பங்கு கிடைக்கும். உடல் நலம் சுகம்பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கடகம்
திருமணம் சம்பந்தப்பட்ட விசயங்களில் நற்பலன்கள் நடக்கும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். பங்காளிச் சண்டைகள் நீங்கி சமாதானமடைவீர்கள். பங்குச் சந்தை லாபம் தரும். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
சிம்மம்
நீண்டநாட்களாக பார்க்காத உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கன்னி
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கூடும். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். குடும்ப உறவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். தனியார் தொழில் அதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணவிசயங்களில் கவனம் தேவை. நண்பர்கள் உதவுவர். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர்களது உடல் நலனை கவனிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
துலாம்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்துயிடுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். நண்பர்களிடமிருந்து நற்செய்தி கிடைக்கும். அரசியலில் இருப்போர் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். நிலம் வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
விருச்சிகம்
இன்று கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரகாரர்கள் தங்கள் பணிகளை துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
தனுசு
பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். பண உதவி கிடைக்கும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மகரம்
உறவினர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். உடல் வலிமை உண்டாகும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம்
மூத்த சகோதரியால் நன்மை விளையும். மனதிற்கு பிடித்தவைகளை செய்வீர்கள். பணவரவில் பஞ்சமில்லை. சமூக ஆர்வலர்கள் சாதனைப் படைப்பர்.தடைபட்ட வேலைகளை சட்டென்று முடிப்பீர்கள். தம்பதிகளிடையே அன்பு குறையாது. வீடு, மனை வாங்குவர்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மீனம்
உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகரமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

