16.1 C
Scarborough

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 22 – 2025 சனிக்கிழமை

Must read

  • குரோதி வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை 22.03.2025
  • சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.
  • இன்று அதிகாலை 01.07 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
  • இன்று இரவு 11.58 வரை மூலம். பின்னர் பூராடம்.
  • கிருத்திகை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
  • சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

வெளிநாடு சென்றவர்கள் சொந்த நாடு திரும்புவீர்கள். குழுவில் கிடைக்கும் பணத்தை பெண்கள் கணவனுக்கு கொடுப்பீர்கள். ஆலயத் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். தகப்பனாரின் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்திற்குத் தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள். மனைவி மக்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்

எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். நல்ல நண்பராக இருந்தாலும் சாட்சி வைத்து பணத்தைக் கொடுங்கள். கேஷ் கவுண்டரில் வேலை செய்பவர்கள் கவனத்துடன் செயல்பட தவறாதீர்கள். வியாபாரத்தில் கூட்டுச் சேர்க்காதீர்கள். தொழிலில் போட்டி வந்தாலும் அனுசரித்துப் போய்விடுங்கள். பழைய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். அஷ்டம சந்திரன். அலட்சியமாக நடக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்

தடைபட்ட திருமண வேலை முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். வேலையிடத்தில் உயரதிகாரிகள் உற்சாகம் கொடுப்பார்கள். தடங்கல் இல்லாமல் அரசு உதவியை பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் கலகலப்பை அதிகரிப்பீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்குவீர்கள். இடையூறாக இருந்த போட்டியை இடம் தெரியாமல் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3

கடகம்

வீம்பாக எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள். அன்பானவர்கள் கூட அம்பாக மாறி குத்துவார்கள். தொழில்துறைகளில் இறக்கமான நிலையை காண்பீர்கள். கடினமாக பேசி காதலியின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். விவசாயத் வேலையில் முனைப்புக் காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழிலில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு சிரமப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்

எளிய முறையில் வியாபாரம் செய்து பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வித் திறனால் பெருமையடைவீர்கள். கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். நிலம் வாங்கி விற்கும் வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள். சிறிய முதலீட்டில் சிறப்பான பலனை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி

அன்னையின் ஆசியால் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிடைத்து பரவசமடைவீர்கள். அரசாங்க வேலையில் சேருவீர்கள். சுணக்கமாக இருந்த தொழிலில் துடிப்புடன் ஏற்றம் காண்பீர்கள். உங்கள் பேச்சுத்திறனால் மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள். கருத்து வேற்றுமையில் இருந்த கணவன் மனைவியை சேர்த்து வைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9

துலாம்

அதிரடியான முயற்சிகளில் இறங்குவீர்கள். அதற்குரிய பலன் குறைவாக கிடைத்தாலும் திருப்தி அடைவீர்கள். சகோதர உறவுகளால் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். அரசு வேலையில் இருப்பவர்கள் சிரத்தையுடன் பணி செய்வீர்கள். பதவி உயர்வு காத்திருக்கிறது. அலைச்சல் அதிகமானாலும் ஆர்டர்கள் பெறுவதில் சிரமப்பட மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்

நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். தடைபட்ட வீட்டு வேலைகளை மளமளவென நடத்துவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சிறப்பான நிலையை எட்டுவீர்கள். தொழில் போட்டிகளைத் துடைத்து ஒழிப்பீர்கள். நகை வாங்கிக் கொடுத்து மகளையும் மருமகனையும் மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். தேடி வந்த உறவுகளை நல்ல முறையில் உபசரிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5

தனுசு

எளிதில் முடிய வேண்டிய காரியம் இழுபறியாக இருப்பதால் டென்ஷன் ஆவீர்கள். வேலையில் கவனமாக இல்லாவிட்டால் அரசு ஊழியர்கள் தண்டனைக்கு ஆளாவீர்கள். நில பிரச்சினைகள் சுலபத்தில் தீர்க்க இயலாமல் தடுமாறுவீர்கள். நியாயமாகப் பேசினாலும் குடும்பத்தினர் புரிந்து கொள்ளாததால் குழப்பம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1

மகரம்

இல்லத்தரசிகள் ஏட்டிக்குப் போட்டியாக நடப்பதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். உடல் ரீதியாக சின்னச் சின்ன உபாதைகளைச் சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகள் கைமீறி கவலைப்படுவீர்கள். பணிச் சுமைகளால் தூக்கம் கெட்டு துன்பப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலை தள்ளிப்போகும். போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9

கும்பம்

தைரியமாகச் செயலாற்றி தலை நிமிர்ந்து நடப்பீர்கள். திட்டமிட்டபடி தொழில்துறைகளை லாபமாக நடத்துவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பீர்கள். விவசாயத் தொழிலில் மேன்மையைக் காண்பீர்கள். புதிய வாகனங்களை தவணை முறையில் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க தவறாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்

போட்டி பந்தயங்களில் அபார வெற்றி பெறுவீர்கள். மாணவர்களின் சாதனையால் கல்லூரிகளில் பாராட்டப்படுவீர்கள். எதிர்பாராத பண வரவால் சேமிப்பை உயர்த்துவீர்கள். கடன் சுமைகளை கட்டுக்குள் கொண்டு வருவீர்கள். புதிய தொழில் முயற்சியில் வெற்றியை காண்பீர்கள். சுவையான உணவுகளை ரசித்து மகிழ்வீர்கள். நளினமாகப் பேசி காரியம் சாதிப்பீர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article