17.6 C
Scarborough

இன்று மோகினி ஏகாதாசி!

Must read

மோகினி ஏகாதசியை முன்னிட்டு, விஷ்ணு பகவானை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த புனித நாளில், விஷ்ணுவை பூஜிப்பதன் மூலம் வெற்றி, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பைப் பெறலாம். மோகினி ஏகாதசி அன்று விஷ்ணு பூஜையை எப்படிச் செய்வது, என்ன மந்திரங்கள் உச்சரிப்பது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

பாற்கடல் கடைந்த போது அமிர்தம் தோன்றியது. அப்போது விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை ஏமாற்றி, தேவர்களுக்கு அமிர்தத்தை கொடுத்தார்.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் மோகினி ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது வைசாக மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் 11வது நாளில் வருகிறது.

விஷ்ணு பக்தர்கள் இந்த நாளில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுகிறார்கள். இதனால் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் ஆன்மீக வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த வருடம் மோகினி ஏகாதசி இன்று எட்டாம் திகதி அனுட்டிக்கப்படுகின்றது.

இன்று விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். விஷ்ணு பூஜையை செய்வதன் மூலம் விஷ்ணுவின் அருளைப் பெற்று, செல்வம், வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை பெறலாம்.

மோகினி ஏகாதசி பூஜையை தொடங்குவதற்கு முன், பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். தரை, சுவர் மற்றும் சுவாமி படங்கள் இருக்கும் இடத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

பிறகு அந்த இடத்தை பூக்கள், ரங்கோலிகள் மற்றும் பாரம்பரிய அலங்காரங்களால் அலங்கரிக்க வேண்டும். இதனால் ஒரு புனிதமான சூழ்நிலை உருவாகும்.

விஷ்ணுவின் படம் அல்லது சிலை, பூக்கள், பழங்கள், ஊதுபத்தி, விளக்குகள் மற்றும் பிற காணிக்கைகள் தயாராக இருக்க வேண்டும். குளித்து விட்டு, தூய மனதுடன் பெருமாளை வழிபடுவது மிகவும் அவசியம்.

மோகினி ஏகாதசி அன்று விஷ்ணுவை நம்பிக்கையுடன் வழிபட்டால், அவரின் ஆசீர்வாதத்தை பெறலாம். பூஜையைத் தொடங்கும் முன் விநாயகரை வணங்க வேண்டும். இதனால் தடைகள் நீங்கும். பிறகு விஷ்ணுவுக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும்.

புதிய பூக்கள் மற்றும் பழங்களை சமர்ப்பிக்க வேண்டும். விளக்கு ஏற்றி சுவாமிக்கு காட்ட வேண்டும். விஷ்ணு மந்திரங்களை சொல்ல வேண்டும். விஷ்ணுவுக்கு பிரசாதம் செய்து படைக்க வேண்டும். ஆரத்தி செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

விஷ்ணு பூஜையின் போது சில முக்கியமான மந்திரங்களை சொல்லலாம். “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரம் மனதையும் உடலையும் சுத்தமாக்கும். மேலும் விஷ்ணுவின் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும்.

“ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்” விஷ்ணுவின் 1000 பெயர்களைக் கொண்டது. இதை சொல்வதால் அமைதி, செல்வம் மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். “ஸ்ரீ விஷ்ணு காயத்ரி மந்திரம்” தெய்வீக ஆசீர்வாதங்களை பெறவும், தடைகளை நீக்கவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் உதவும்.

வழக்கமான ஏகாதசிகளை போல் மோகினி ஏகாதசி அன்றும் உணவு சாப்பிடாமல் உபவாசமாக இருந்து திருமாலை வழிபட வேண்டும். இதுனால் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். அன்றைய தினம் தானம் செய்வது மிக முக்கிமானதாகும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article