தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றுள்ளார். இந்தநிலையில், ரஷிய அதிபர் புடினை நெரில் சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை உறுதி செய்யும் விதமாக, ரஷிய அதிபர் புடின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதின் இந்திய வருகைக்கான தேதிகள் இறுதி செய்யப்படுகின்றன என்று பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளநிலையில், பிரதமர் மோடி சீனா செல்வதற்கு முன்னதாக ரஷிய அதிபர் புடின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா இந்தியாவுக்கு வரி கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் புடின் இந்தியா வருவது முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. அஜித் தோவலின் பயணத்தை தொடர்ந்து வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரும் இந்த மாத இறுதியில் ரஷியா செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

