6.6 C
Scarborough

இந்தியா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

Must read

இந்திய அணி உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா நிர்வாகம். இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா கேப்டனாக வழிநடத்துக்கிறார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

கடந்த ஜூன் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு 4 டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா விளையாடி உள்ளது. அதில் மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. அண்மையில் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை 1-1 என அந்த அணி சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி கொல்கத்தாவிலும், 2-வது போட்டி குவாஹாத்தியில் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரேவிஸ், டோனி டி சோர்ஸி, ஸுபயர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்க்கோ யான்சன், கேஷவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரேன்.

கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுள்ள பவுமா அணிக்கு திரும்பி உள்ளார். அவர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை மிஸ் செய்திருந்தார் என கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது. கடைசியாக பவுமா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு இப்போதுதான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.

HinduTmail

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article