இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (30) அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தில் அவர் 03 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
ஜூலை 20 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் வரவிருக்கும் பணிகளை மதிப்பாய்வு செய்வதே இந்த விஜயத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.