6.3 C
Scarborough

இந்த ஆண்டில் அமெரிக்காவின் உறவால் கனடா மிகப்பெரிய சவால்களை எதிர் கொள்ள நேரிடும்.

Must read

அமெரிக்காவில் 2026-ஆம் ஆண்டில் ஏற்படும் அரசியல் கொந்தளிப்பினால் கனடா மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று Eurasia Group நிறுவனம் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளது.

​இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வந்த உறவு முடிந்துபோன ஒன்று என்றும், தொடர்ந்து நிலவும் வர்த்தக நிச்சயமற்ற தன்மை கனேடியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த இடர் முகாமைத்துவ நிறுவனம் கூறுகிறது.

​அந்த அறிக்கையில், தனது அதிகாரத்தின் மீதான கட்டுப்பாடுகளைத் தகர்க்கவும், அரசாங்க இயந்திரத்தைத் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தவும் Trump எடுக்கும் முறையான முயற்சிகள், கனடா-அமெரிக்க உறவுகளை மட்டுமல்லாமல், கனடாவின் பொருளாதாரம் மற்றும் உலகின் ஏனைய நாடுகளுடன் கனேடியர்கள் கொண்டுள்ள தொடர்புகளையும் தவிர்க்க முடியாமல் மாற்றியமைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தகத்தை பல்வகைப்படுத்தவும், சர்வதேச உறவுகளை மேம்படுத்தவும் கனடா எடுக்கும் முயற்சிகள் இந்த ஆண்டில் வலுவான முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளும் என்றும், ஏனைய நாடுகளுடன் புதிய உறவுகளைக் கட்டமைக்கும் அதே வேளையில் அமெரிக்காவுடனான உறவையும் நிர்வகிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
கனடா ​இரத்து செய்த digital services வரி மற்றும் அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்த online streaming அத்துடன் செய்தி உள்ளடக்கங்கள் தொடர்பான சட்டங்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்காவின் அழுத்தத்தைத் தாங்கி நின்று, AI திறமையாளர்களை உருவாக்கவும் அவர்களைத் தக்கவைக்கவும் தேவையான நிதியுதவியை கனடாவால் தொடர்ந்து வழங்க முடிந்தால், கனேடியத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு எல்லையே இருக்காது’ என்றும் அது குறிப்பிடுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article