19.5 C
Scarborough

இத்தனை வருடங்களாக மிஷ்கினுடன் வேலை செய்வதை தவறவிட்டேன் – எஸ். தாணு

Must read

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஷ்கின்

விஜய் சேதுபதி வைத்து ட்ரெயின் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஷ்கின். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான சைக்கோ திரைப்படத்தை இயக்கினார்.

அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியான கதாப்பாத்திரத்தில் மிஸ்கின் நடித்தார். 2023 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி வைத்து ட்ரெயின் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். முகம் முழுவதும் அடர்த்தியான தாடியுடன் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இருக்கிறார். இப்படத்திற்கு ஃபௌசியா பாதிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் இதற்கு முன் உயிர், விசில், இவன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு ஒளிப்பதிவு செய்யும் திரைப்படம் ட்ரெயின் ஆகும்.

ட்ரெயின் படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலிற்கு ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான எஸ். தாணு பங்கேற்ற நேர்காணலில் இப்படத்தின் அப்டேட்டை கூறீயுள்ளார். அதில் அவர் ” டிரெயின் திரைப்படம் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மிஷ்கின் தமிழ் சினிமாவின் ஆக சிறந்த இயக்குனர். ரொம்ப பிரம்மாதமான படைப்ப உருவாக்கி இருக்கிறார். இப்படமும் மிகவும் சுவாரசியம் மிகுந்த திரில்லராக இருக்கும். 15 வருஷத்துக்கு முன் என்னை அவர் சந்தித்தார். அப்பொழுது நான் அவரை மிஸ் செய்து தவறவிட்டேனா? இல்லை அவர் என்னை தவறவிட்டரா என தெரியவில்லை இனிமேல் அது நடக்காது.” என கூறியுள்ளார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article