டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் 98-வது ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த திரைப்படத்துக்கான பொதுப் பட்டியலில் உலக அளவில் தேர்வான 201 படங்களில் ஒன்றாகவும், இந்திய அளவில் தேர்வான 5 படங்களில் ஒன்றாகவும் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆருயிர் இளவல் யுவராஜின் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவன தயாரிப்பில், அன்புமகன் இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான திரை ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைகொண்டு, மாபெரும் வெற்றிப்படைப்பான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் 98-வது ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த திரைப்படத்துக்கான பொதுப் பட்டியலில் உலக அளவில் தேர்வான 201 படங்களில் ஒன்றாகவும், இந்திய அளவில் தேர்வான 5 படங்களில் ஒன்றாகவும் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.

