16.7 C
Scarborough

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

Must read

ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.

இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வரும் 29-ம் தேதி தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது. தொடர்ந்து 31-ம் தேதி ஜப்பானுடனும், செப்டம்பர் 1-ம் தேதி கஜகஸ்தானுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டிராக் பிளிக்கரான ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக தொடர்கிறார். நடுவரிசை வீரர் ரஜிந்தர் சிங், முன்கள வீரர்களான ஷில்லானந்த் லக்ரா, தில்பிரீத் சிங் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் 3 பேரும், ஷம்ஷேர் சிங், லலித் உபாத்யாய், குர்ஜாந்த் சிங் ஆகியோருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோல்கீப்பர்கள்: கிருஷ்ணன் பதக், சுராஜ் கார்கீரா, டிபன்டர்கள்: சுமித், ஜர்மான்பிரீத் சிங், சஞ்ஜய், ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், நடுவரிவசை: ராஜிந்தர் சிங், ராஜ் குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத். முன்களம்: மன்தீப் சிங், ஷில்லானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்ப்ரீத் சிங். மாற்று வீரர்கள்: நீலம் சஞ்சீவ், செல்வம் கார்த்தி.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article