16.5 C
Scarborough

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஜஸ்பிரீத் பும்ரா ஆர்வம்!

Must read

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுக் குழுவினரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 19-ம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடி இருந்தார். பணிச்சுமை காரணமாக அவருக்கு 2 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. காயம் சார்ந்த அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை கவனத்துடன் விளையாட வைத்து வருகிறது.

இந்​நிலை​யில் ஆசி​யக் கோப்பை போட்​டி​யில் விளை​யாடு​வதற்கு தான் தயா​ராக இருப்​ப​தாக தேர்​வுக் குழு​வினரிடம் ஜஸ்​பிரீத் பும்ரா தகவல் தெரி​வித்​துள்​ளார். இத்​தகவலை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரிய(பிசிசிஐ) வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. இதுதொடர்​பாக கடந்த சில தினங்​களுக்கு முன்பு பிசிசிஐ நிர்​வாகி​களிடம் பேசி​யுள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. வரும் 19-ம் தேதி இந்​திய அணி​யை, தேர்​வுக் குழுத் தலை​வர் அஜித் அகர்​கர் தலை​மையி​லான குழு தேர்வு செய்​ய​வுள்​ளது. இந்​தக் கூட்​டத்​தில் 15 பேர் கொண்ட இந்​திய அணி வீரர்​கள் தேர்வு செய்​யப்​படு​வர்.

இதற்​காக கடந்த வாரமே தான் முழு தகு​தி​யுடன் இருப்​ப​தாக​வும், ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் விளை​யாடு​வதற்​குத் தயா​ராக இருப்​ப​தாக​வும் தேர்​வுக் குழு​வினரிடம் பும்ரா தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து பிசிசிஐ வட்​டாரங்​கள் கூறும்​போது, “ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் விளை​யாடு​வதற்கு பும்ரா ஆர்​வ​மாக உள்​ளார். அவர் போட்​டி​யில் விளை​யாடு​வதற்கு தயா​ராகி விட்​ட​தாக தேர்​வுக் குழு உறுப்​பினர்​களிட​மும், பிசிசிஐ நிர்​வாகி​களிட​மும் தெரி​வித்​துள்​ளார். வரும் 19-ம் தேதி நடை​பெறும் தேர்​வுக் குழுக் கூட்​டத்​தின்​போது ஜஸ்​பிரீத் பும்ரா பெயரும் பரிசீலிக்​கப்​படும் என்று தெரி​கிறது” என்று தெரி​வித்​தன.

இங்​கிலாந்​தில் நடை​பெற்ற 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்​போது பும்ரா 3 போட்​டிகளில் விளை​யாடி சிறப்​பாக பந்​து​வீசி இருந்​தார். மேலும் 2 முறை ஒரே இன்​னிங்​ஸில் தலா 5 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​யிருந்​தார்.

கடைசி​யாக 2024-ம் ஆண்டு நடை​பெற்ற டி20 உலகக் கோப்பை போட்​டி​யின்​போது, பும்ரா இந்​திய அணிக்​காக விளை​யாடி​யிருந்​தார். பிரிட்​ஜ்ட​வுனில் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக பந்​து​வீசி 18 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட்​களை பும்ரா கைப்​பற்​றி​யிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article