பிரியங்கா சோப்ராவின் உறவினரும் நடிகையுமான மீரா சோப்ரா, ஒரு அதிர்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிகாலை நேரத்தில் 6 மணி நேரத்திற்கு கார் முன்பதிவு செய்ததாக கூறிய அவர், வந்த வாகனம் தூசி படிந்தும் துர்நாற்றம் வீசியும் இருந்ததாக குற்றம்சாட்டினார்.
இது பற்றி டிரைவரிடம் கேட்டதாகவும், ஆனால் அவர் சரியாக பேச கூட முடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவர் தூக்க கலக்கத்தில் கார் ஓட்டியதாகவும், இது தனது பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
20 நிமிடங்களுக்குள் இறங்கி வேறு வாகனம் முன்பதிவு செய்ததாக கூறிய அவர், பயணத்தை நிறுத்திய போதிலும் முழு 6 மணி நேர கட்டணமும் வசூலித்ததாக குற்றம்சாட்டினார்.
நாட்டில் பொது போக்குவரத்து பாதுகாப்பு தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றன என்றும் மீரா சோப்ரா தெரிவித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரா சோப்ரா 2005ஆம் ஆண்டு வெளியான ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடித்தார். பின்னர் தெலுங்கில் ‘பங்காரம்’, ‘வானா’ போன்ற படங்களில் நடித்தார். 2016ஆம் ஆண்டு ‘1920 லண்டன்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ‘செக்சன் 375’ படத்தில் அஞ்சலி டாங்கிள் கதாபாத்திரத்தில் நடித்த அவர், சமீபத்தில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற மவுன திரைப்படத்தை தயாரித்தார்.

