13.5 C
Scarborough

அல்பேனியாவிலிருந்து 50அகதிகள் இத்தாலிக்குள் மீள் வருகை

Must read

பங்களாதேஷ் , எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுகின்றனர். ஆனால் இந்த அகதிகளின் குடியேற்றத்தால் அங்கு சட்டம், ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த எல்லைப் பகுதிகளில் ஐரோப்பிய நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

இதற்கிடையே கடந்த ஆண்டு சுமார் 66 ஆயிரம் பேர் அகதிகளாக இத்தாலியில் குடியேறி உள்ளனர். எனவே அகதிகள் குடியேற்றத்தை தடுக்க இத்தாலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் இத்தாலிக்குள் நுழைய முயன்ற 50 பேரை கைது செய்த இத்தாலியக் கடற்படையினர் அல்பேனியாவிலுள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர்களை நாடு கடத்த அரசாங்கம் முடிவு செய்தது. ஆனால் இத்தாலிய நீதிமன்றம் அவர்களை நாடு கடத்துவதற்குத்  தடை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து அல்பேனியாவில் அகதிகள் முகாமில்  தங்க வைத்த 50பேரும் படகு மூலம் இத்தாலிக்குத்  திரும்ப அழைத்து  வரப்பட்டனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article